உக்ரைன் விவகாரம் பற்றிய சீனாவின் நிலைப்பாடு
2022-04-20 11:26:48

ஐ.நா பாதுகாப்பவை உள்ளூர் நேரப்படி ஏப்ரல் 19ஆம் நாள் உக்ரைனிலுள்ள மனித நேய விவகாரத்தைப் பரிசீலனை செய்தது.

ஐ.நாவிலுள்ள சீன நிரந்தரப் பிரதிநிதி ட்சாங் ஜுன் கூறுகையில், உக்ரைல் நிகழும் மோதல், கடும் மனித நேய சூழ்நிலை மற்றும் வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. சீனா 4 முன்மொழிவுகளை வழங்குகிறது. முதலாவதாக, அப்பாவி மக்களின் மீதான பாதிப்பை முழு முயற்சியுடன் குறைக்க வேண்டும். இரண்டாவதாக, அகதிகள் தொடர்புடைய விவகாரத்தை உகந்த முறையில் சமாளிக்க வேண்டும். மூன்றாவதாக, தூதாண்மை வழிமுறையின் மூலம் பேச்சுவார்த்தையை அவசரமாக முன்னேற்ற வேண்டும். நான்காவதாக, தடை நடவடிக்கைகள் விளைவித்த பாதிப்பில் கவனம் செலுத்தி இவற்றை நீக்க வேண்டும் என்றார்.

மேலும், அமைதி மற்றும் நேர்மைக்கு சீனா எப்போதுமே ஆதரவு அளித்து வருகிறது. உக்ரைன் நெருக்கடிக்கான தீர்வுக்கு சீனா தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.