தீய நோக்கத்துடன் இணையத்தில் அமெரிக்காவின் செயல்கள்
2022-04-20 17:42:49

அமெரிக்கா தீய நோக்கத்துடன் இணையத்தில் மேற்கொண்டு வரும் பொறுப்பற்ற செயல்கள் கவலை அளிப்பதாய் உள்ளது என்று சீனா கடும் கவலை தெரிவித்துள்ளது. இது பற்றி அமெரிக்கா விளக்கம் அளிப்பதுடன், இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வேன்பின் 20ஆம் நாள் தெரிவித்தார்.

அவர் சீனத் தேசியக் கணினி வைரஸ் அவசரநிலை பதில் மையத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி கூறுகையில், உலக அளவில் இணையத் தாக்குதல் மேடைகளை அமெரிக்க அரசு அமைத்து வருகின்றது. அமெரிக்கக் கூட்டு நிறுவனங்களால் விநியோகிக்கும் மென்ரக மற்றும் கனரகப் பொருட்களில் பல்வகை பின்வழி செயலாக்கப் பயன்பாடுகள் இருக்கக் கூடும் என்று தெரிவித்தார்.