திபெத்தில் சாலையோரக் காப்பி கடை… அற்புதம்!
2022-04-21 10:06:45

சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில், ஒருவர், ஒரு வாகனம், ஒரு காப்பி கடை ஆகியவற்றுடன், ஒரு அருமையான கதை நிகழ்கிறது..

சியௌரோங் எனும் சீன மங்கை, சீனா முழுவதும் சுற்றுப் பயணம் செய்வது என்ற கனவுடன் செயல்பட்டு வருகிறார். இதற்காக, அழகான திபெத்தை, தனது கனவின் துவக்கமாக கொள்ள முடிவு எடுத்துள்ளார். வாகனத்தின் மூலம் நகர்ந்து செல்லும் சாலையோரக் காப்பி கடையை இயக்கும் அதேவேளையில், சியௌரோங் தனது இனிய திபெத் பயணத்தில் காலடி எடுத்து வைத்தார்.