ஐ.நா பணிக்கு சீன மொழியின் முக்கிய பங்கு
2022-04-21 10:02:19

ஏப்ரல் 20ஆம் நாள், ஐ.நாவின் சீன மொழி தினமாகும். ஐ.நாவிலுள்ள சீன நிரந்தரப் பிரதிநிதி ட்சாங் ஜுன், 76வது ஐ.நா பொது பேரவையின் தலைவர் அப்துல்லா ஷாஹித் முதலியோர் காணொளி வழியாக, சீன மொழி தினத்துக்கான நிகழ்ச்சியின் துவக்க விழாவில் பங்கெடுத்தனர். ட்சாங்ஜுன் கூறுகையில், ஐ.நாவின் 6 அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக, ஐ.நாவின் பணியை முன்னேற்றுவது, பல்வேறு நாடுகளுக்கிடையிலான தொடர்பை வலுப்படுத்துவது, பலதரப்புவாதத்தை முன்னேற்றுவது ஆகியவற்றுக்கு சீன மொழி முக்கிய பங்காற்றி வருகின்றது. சீன மொழி உள்ளிட்ட அதிகாரப்பூர்வ மொழிகளின் சமமான பயன்பாட்டை ஐ.நா தொடர்ந்து முன்னேற்றி, உலகத்துக்கு ஐ.நாவின் கருத்துக்களை மேலும் செவ்வனே பரவல் செய்ய விரும்புவதாக அவர் தெரிவித்தார்.