உலகப் பாதுகாப்பு முன்மொழி:ஷிச்சின்பிங்
2022-04-21 20:37:53

உலகப் பாதுகாப்பு முன்மொழிவைச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 21ஆம் நாள் முன்வைத்தார். 2022ஆம் ஆண்டு போ ஆவ் ஆசிய மன்றத்தின் ஆண்டு கூட்டத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய போது, அவர் வைத்த இந்த முன்மொழிவு சர்வதேச சமூகத்தில் விரிவான கவனத்தைப் பெற்றுள்ளது.

2013ஆம் ஆண்டு முதல் போ ஆவ் ஆசிய மன்றக் கூட்டங்களில் ஷிச்சின்பிங் ஐந்து முக்கிய உரைகளை நிகழ்த்தி உள்ளார். அதில்  பாதுகாப்பு என்ற வார்த்தை முக்கியமாக இடம்பிடித்துள்ளது.

ஆசியாவைப் பொறுத்தவரை, பாதுகாப்பு முன்மொழிவு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால், அமைதியின்மை, வளர்ச்சியின்மையே காரணம். 2021ஆம் ஆண்டில், உலகின் மொத்தப் பொருளாதாரத்திலும் ஆசியப் பொருளாதாரத்தின் விகிதம் 47.4 விழுக்காடாக உயர்ந்துள்ளது. சீனா, ஆசியான் நாடுகள், இந்தியா முதலிய நாடுகளில் பொருளாதார மீட்சியின் வேகம் உலக சராசரி நிலைமையை விட வேகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்காலத்தில், ஆசிய பொருளாதாரத்தின் முக்கியத்துவம் தொடர்ந்து வளரும் என்பதில் ஐயமில்லை.