பொருளாதாரத்தை நிலைப்படுத்த இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!
2022-04-21 15:39:46

இலங்கை தனது நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்த  ஏற்கனவே மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றி சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளது என இலங்கை அமைச்சகம் செவ்வாய்கிழமை அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம் தங்களின் முழுமையான ஆதரவை இலங்கைக்கு வழங்குவதாக உறுதி அளித்துள்ளது. மேலும், இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஆதரவை வலுப்படுத்துவதற்கான செயல்முறையை விரைவுபடுத்துவதற்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிதியமைச்சர் அலி சப்ரி,விரைவு நிதியளிப்பு கருவியை கோரியுள்ளார். விரைவு நிதியளிப்பு கருவிக்காக இலங்கையின் சார்பாக இந்தியாவும் கருத்துருவை முன்வைத்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அலி சப்ரியிடம் தெரிவித்துள்ளது.