ஜி20 கூட்டத்தில் சீன நிதி அமைச்சரின் கருத்து
2022-04-21 09:54:15

ஜி20 அமைப்பின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கித் தலைவர்களின் கூட்டம் ஏப்ரல் 20, 21 ஆகிய நாட்களில் நடைபெற்றது. சீன நிதி அமைச்சர் லியூ குன் காணொளி வழியில் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

இடர்பாடுகள் மற்றும் சவால்களைச் சந்திக்கும் நிலையில், ஜி20 அமைப்பின் உறுப்பு நாடுகள் ஒற்றுமையுடன் ஒத்துழைத்து, பதற்றமான உலகிற்கு நிலைத்தன்மையை வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

பொருளாதார விவகாரத்தை அரசியலாக்குவதை சீனா எதிர்க்கிறது என்று அழுத்தம்பட தெரிவித்ததோடு, பல்வேறு தரப்புகளுடன் இணைந்து நோய் தொற்று எதிர்ப்புக்கான நிதி திரட்டல் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், கரி குறைந்த பசுமையான வளர்ச்சியை முன்னேற்றவும் சீனா விரும்புகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.