2022-இல் ஆசிய பொருளாதார வளர்ச்சி 4.8 விழுக்காடு
2022-04-21 10:09:08

போஆவ் ஆசிய மன்றத்தின் 2022ஆம் ஆண்டு கூட்டத்துக்கான முதல் செய்தியாளர் சந்திப்பு 20ஆம் நாள் நடைபெற்றது. அதில், ஆசிய பொருளாதார ஒருமைப்பாட்டின் வளர்ச்சிப் போக்கு, தொடர்ச்சியாக வளரக் கூடிய ஆசியா மற்றும் உலகம் ஆகிய இரண்டு ஆண்டறிக்கைகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. இவ்வறிக்கைகளுக்கான ஆய்வுக் குழுவின் கணிப்பின்படி, 2022ஆம் ஆண்டில் ஆசிய பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் 4.8 விழுக்காட்டை எட்டும்.

2021ஆம் ஆண்டில் உலகளாவிய நோய் தொற்று பாதிப்பில் முதலில் மீட்சி அடைந்த ஆசியா, உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய இயக்காற்றலாக அமைந்தது என்று இவ்வறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 நோய் தொற்று பரவல், ரஷிய-உக்ரைன் மோதல், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாணயக் கொள்கைகள் உள்ளிட்ட காரணிகளால், 2022ஆம் ஆண்டில் ஆசிய பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் குறையக் கூடும். இருப்பினும் உலகப் பொருளாதாரத்தின் சராசரி வளர்ச்சி வேகத்தை விட அதிகம் என்றும் இவ்வறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.