அமெரிக்காவில் நர்சிங் இல்லங்கள் மூடல்
2022-04-22 19:11:02

அமெரிக்காவில் 2020ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை 300-க்கும் மேற்பட்ட நர்சிங் ஹோம் என அழைக்கப்படும் பேணுகை இல்லங்கள் மூடப்பட்டுள்ளன அல்லது மூடப்பட உள்ளன என்று யுஎஸ்ஏ டுடே என்ற செய்தி ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, ஏழை மக்களுக்கும், ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதி மக்களுக்கும் சேவை புரிந்து வந்த பேணுகை இல்லங்கள், கொவைட்-19 பரவல் காரணமாக, அதிகமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. பணியாளர்கள் பற்றாக்குறை ஒரு காரணமாக இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.

பேணுகை இல்லங்கள் மூடப்பட்டு வருவது, பணியாளர்கள் நிலையை மேம்படுத்த பைடன் நிர்வாகம் மேற்கொள்ளும் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு சிக்கலை உண்டாக்கும் எனக் கருதப்படுகிறது.