மும்பையில் சர்வதேச சொகுசுக் கப்பல் மாநாடு
2022-04-22 19:10:12

இந்தியாவின் நிதித் தலைநகர் என அழைக்கப்படும் மும்பையில் சர்வதேச சொகுசுக் கப்பல் மாநாடு மே 14 முதல் 15 வரையில் நடைபெற உள்ளது. இது, இந்தியா நடத்தும் முதலாவது சர்வதேச சொகுசுக் கப்பல் மாநாடு என்று மத்திய கப்பல்துறை அமைச்சர் சோனோவால் வியாழக்கிழமை தெரிவித்தார்.

வலுவான தேவை மற்றும் நல்ல வருமானம் ஆகியவற்றின் காரணமாக அடுத்த பத்தாண்டில் இந்தியாவின் சொகுசுக் கப்பல் துறை 10 மடங்கு வளர்ச்சி பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2019இல் 400 சொகுசுக் கப்பல்களையும், 4 லட்சம் பயணிகளையும் இந்தியா வரவேற்றது.

சர்வதேச சொகுசுக் கப்பல் மாநாட்டின் மூலம், சொகுசுக் கப்பல் பயணிகள் செல்ல விரும்பும் இடமாக இந்தியாவை வெளிக்காட்ட முடியும். மேலும், இது தொடர்பான சுற்றுலாத் துறையை வளர்க்க இந்தியா மேற்கொண்டு வரும் ஆயத்தப் பணிகளை தெரிவிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.