முதல் காலாண்டில் வெளிநாடுகளுக்கான சீனாவின் முதலீடு
2022-04-22 10:29:55

முதல் காலாண்டில் வெளிநாடுகளின் அனைத்து தொழில்களுக்கான சீனாவின் நேரடி முதலீடு 3429 கோடி அமெரிக்க டாலரை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 7.9 விழுக்காடு அதிகரித்தது என்று சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் காவ் ஃபேங் 21ஆம் நாள் இணையவழி செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். மேலும், வெளிநாடுகளுக்கான சீனாவின் நிதி சாரா நேரடி முதலீடு 2692 கோடி டாலரை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 8.5 விழுக்காடு அதிகரித்தது. இதில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகளுக்கான சீனாவின் நிதி சாரா நேரடி முதலீடு 19 விழுக்காடு அதிகரிப்புடன் 526 கோடி டாலரை எட்டியது என்றும் அவர் அறிமுகப்படுத்தினார்.