சீன-அமெரிக்க தேசியப் பாதுகாப்பமைச்சர்கள் தொடர்பு
2022-04-22 20:57:26

சீன அரசவை உறுப்பினரும் தேசிய பாதுகாப்பு அமைச்சருமான வேய் ஃபாங் ஹே, 20ஆம் நாள் அமெரிக்க தேசியப் பாதுகாப்பமைச்சர் ஆஸ்டினுடன் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டார்.

வேய் ஃபாங் ஹே கூறுகையில், சீனாவும் அமெரிக்காவும், இரு நாட்டுத் தலைவர்கள் எட்டியுள்ள பொது கருத்துகளைக் கவனமாகச் செயலாக்க வேண்டும். அமெரிக்காவுடன் சுமுகமான மற்றும் நிதானமான நட்புறவை உருவாக்க, சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.

ஆஸ்டின் கூறுகையில், அமெரிக்கா, ஒரே சீனா என்ற கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது என்று தெரிவித்தார்.

இரு தரப்பினரும் வான் பரப்பு பாதுகாப்பு, உக்ரைன் நிலைமை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.