அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி – 35 விழுக்காடு வாய்ப்பு
2022-04-22 19:10:30

அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட 35 விழுக்காடு வாய்ப்பு உண்டு என்று அரசுத் தலைவர் பைடனுக்கு நெருக்கமான பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர் என்று ஃபார்ட்ஷுயூன் இதழ் தெரிவித்துள்ளது.

இவ்வாண்டில் விநியோகச் சங்கிலி குறித்து அதிகம் கவனத்தில் கொள்ளப்படும் என்றும், சிறந்த காலாண்டு பொருளாதார வளர்ச்சிகளைப் பெற வாய்ப்புண்டு என்றும் அவர்கள் கணித்துள்ளனர்.

பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததால் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியும், விநியோகச் சங்கிலியும் கடுமையாக பாதித்தது. பணவீக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே, வட்டி விகிதத்தை உயர்த்தி, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் அந்நாட்டு மத்திய வங்கி உள்ளது.

அதுவும், பொருளாதார வளர்ச்சிக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதால், பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உண்டு என்று கணிக்கப்பட்டுள்ளது.