சீன மற்றும் இலங்கை தலைமையமைச்சர்களின் தொடர்பு
2022-04-22 20:45:35

சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங் ஏப்ரல் 22ஆம் நாள் பிற்பகல் இலங்கை தலைமையமைச்சர் மகிந்த ராஜபக்சேவுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார்.

சீனாவும் இலங்கையும் ஆழ்ந்த பாரம்பரிய நட்புறவைக் கொண்டிருக்கின்றன. இங்கை மக்களின் வாழ்வாதாரதுக்குத் தேவையான உதவிகளை தன்னால் இயன்றவரை வழங்க சீனா விரும்புகின்றது. உள்விவகாரங்களில் தலையிடாமை மற்றும் இலங்கையின் விருப்பத்துக்கு மதிப்பளித்தல் என்ற அடிப்படையில், இலங்கையின் பொருளாதார மற்றும் சமூகத்தின் நிதான வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமாகப் பங்காற்ற விரும்புகின்றோம் என்று லீ கெக்சியாங் தெரிவித்தார்.

இலங்கை இன்னல்களை எதிர்கொண்டுள்ள போது சீனா அளித்து வரும் பேராதரவுக்கு மகிந்தா நன்றி தெரிவித்தார். நிதி, பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், சுற்றுலா முதலிய துறையில் சீனாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இருதரப்பு தாராள வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தையை முன்னேற்ற இலங்கை விரும்புகின்றது என்றும் அவர் கூறினார்.