முகக் கவசம் விதிமுறையில் இலங்கை மாற்றம்
2022-04-22 19:09:12

இலங்கையில் முகக் கவசம் அணிவதில் கொண்டு வரப்பட்ட தளர்வு முடிவை அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை மாற்றி வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து முகக் கவசம் அணிவது கட்டாயமாக உள்ளது.

நாடு முழுவதும் மக்கள் ஒன்றாகக் கூடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதைக் கருதி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு மருத்துவ தொழில்நுட்ப சேவைகளின் இயக்குநர் ஹம்தனி கூறுகையில், முகக் கவசம் அணிவது குறித்து மக்களே முடிவு எடுக்கலாம் என்று தொழில்நுட்பக் குழு கடந்த வாரம் அறிவித்தது. ஆனால், சுகாதாரத் துறை நிபுணர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் அவசரகதியில் இம்முடிவை எடுத்தனர் என்றார்.