போஆவ் கூட்டத்தில் நோய் எதிர்பாற்றல் இடைவெளி குறைக்கும் வேண்டுகோள்
2022-04-22 10:44:03

போஆவ் ஆசிய மன்றத்தின் 2022ஆம் ஆண்டு கூட்டத்தில் ஆரோக்கிய வாழ்வைப் பகிர்ந்து கொள்வதென்ற கிளை கருத்தரங்கு 20ஆம் நாள் மாலை நடைபெற்றது. சர்வதேச தொற்றுநோய் தடுப்புக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்தி நோய் எதிர்பாற்றலின் இடைவெளியைக் குறைக்க வேண்டும் என இதில் கலந்து கொண்ட பன்னாட்டு விருந்தினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சீன மருத்துவ சங்கத்தின் தலைவர் வாங்சென் கூறுகையில், வளர்ந்த நாடு மற்றும் வளரும் நாடுகளிடையே உள்ள நோய் எதிர்பாற்றல் இடைவெளி தான் உலகின் தொற்றுநோய் தடுப்புக்கு அதிக உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் தடுப்பூசி செலுத்தும் நிலையை மேம்படுத்தும் விதம், தடுப்பூசி போடும் திட்டப்பணியை உரிய நேரத்தில் நியாயமான முறையில் செயல்படுத்த வேண்டும் என்றார்.