ஐயத்திற்குரிய அமெரிக்க உயிரியல் ஆய்வகங்கள்
2022-04-23 19:10:11

உயிரியல் ஆயுதத் தடை உடன்படிக்கையில் இணைந்த நாடாக, அமெரிக்கா, இவ்வுடன்படிக்கையைப் பின்பற்ற வேண்டும். தனது உயிரியல் ராணுவ நடவடிக்கைகளை தெளிவாக விளக்க வேண்டும். அமெரிக்கா, ஒரே ஒரு நாடாக, அதன் மீது பலதரப்பு சரிபார்ப்பு முறைமையை எதிர்ப்பதை நிறுத்த வேண்டும் என்று சீனா வலியுறுத்துவதாக சீன வெளியுறவு அமைச்சின் செய்திதொடர்பாளர் சாவ் லிச்சியன் 22ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இப்போது வரை, தனது உயிரியல் ராணுவ நடவடிக்கைகளின் மீது நம்பக் கூடிய விளக்கங்களை அமெரிக்கா அளிக்க வில்லை. அமெரிக்காவின் தெளிவற்ற விளக்கங்கள் சர்வதேச சமூகத்தின் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.