முதல் தேசிய வாசிப்பு மாநாடு குறித்து ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
2022-04-23 18:55:23

சீனாவின் முதல் தேசிய வாசிப்பு மாநாடு 23ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. இதற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும் அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங் வாழ்த்து செய்தி அனுப்பினார்.

மனிதர்கள், அறிவை பெருக்கி, அறிவுத்திறமை அதிகரிக்கும் முக்கிய வழி வாசிப்பு பழக்கம் ஆகும். வாசிப்பு, சீன மக்களின் பாரம்பரிய பழக்கமாகும் என்று ஷி ச்சின்பிங் வாழ்த்து செய்தியில் தெரிவித்தார்.

கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் அதிகாரிகளும் நூல்களை வாசித்து, சொந்த திறனை மேம்படுத்த வேண்டும். குழந்தைகள் வாசிப்பு பழக்கத்தை கற்றுக்கொடுத்து, மகிழ்ச்சியாக வாசிக்க வேண்டும். முழு சமூகம், வாசிப்பு நிகழ்ச்சியில் பங்கெடுத்து, வாசிப்பு பழக்கத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.