அமெரிக்கா சொல்லும் சுதந்திரம் பற்றிய உண்மையை வெளிகாட்டிய ஜூலியன் அசாஞ்சேவின் அனுவபங்கள்
2022-04-23 19:15:47

விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை, அமெரிக்காவுக்கு அனுப்ப பிரிட்டனின் லண்டன் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. இந்த தீர்ப்பு குறித்து சில தரப்புகள் சந்தேகத்தை எழுப்பி  எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து அசாஞ்சேவின் வழக்கறிஞர் பேசுகையில், அமெரிக்காவில் அசாஞ்சேவுக்கு 175 ஆண்டுகள் சிறைத்தண்டை விதிக்கப்படக் கூடும் என்று சுட்டிக்காட்டினார்.

ஜூலியன் அசாஞ்சேவிடம் என்ன நடந்தது? ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய போர்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை அவர் 2010ஆம் ஆண்டு விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டார்.  அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் போர் குற்றங்களை பொது மக்களிடையே வெளியிட்டதால் தான், அசாஞ்சே அமெரிக்க அரசின் எதிரியாக திகழ்கிறார். 

அமெரிக்கா எங்கெங்கும் பரப்பு செய்து வரும் மனித உரிமை மற்றும் ஜனநாயகம், சுந்திரம் ஆகியவற்றின் உண்மையை, அசாஞ்சேவின் அனுபவங்களே முழு உலகிற்கு வெளிக்காட்டுகின்றன. அமெரிக்காவின் சில அரசியல்வாதிகளின் பார்வையில், அவர்கள் குறிப்பிட்ட சுதந்திரத்தில், மற்றவர்கள் உண்மையைச் சொல்ல அனுமதிக்காது. அவர்களின் பார்வையில், சுதந்திரமானது, மேலாதிக்கம் செலுத்துவதற்கான கருவியாக மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.