பூமியையும் மனிதக் குலத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் சீனா
2022-04-24 15:25:38

ஏப்ரல் 24ஆம் நாள் சீனாவின் விண்வெளி தினம் மற்றும் நாட்டின் முதல் பூமி செயற்கைக்கோளான "டாங்ஃபாங்ஹாங்--1" வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதன் 52வது ஆண்டு நிறைவு விழாவாகும்.

இதையொட்டி சீனத் தேசிய விண்வெளி ஆய்வுப் பணியகத்தின் துணைத் தலைவர் வூ யான்ஹுவா அண்மையில் சீன ஊடகக் குழுமத்தைச் சேர்ந்த செய்தியார்களுக்குச் சிறப்புப் பேட்டி அளித்தார். அப்போது, விண்வெளியில் விண்கலங்களின் பாதுகாப்பான, நிலையான மற்றும் ஒழுங்கான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக, சீனா பூமிக்கு அருகில் சிறுகோள் தடுப்பு அமைப்பை உருவாக்கப் பாடுபடும் என்றும் பூமியையும் மனிதக் குலத்தின் பாதுகாப்பையும் பாதுகாக்கும் வகையில், சீனா தனது சக்தியை பங்களிக்கும் என்றும் அவர் கூறினார்.