அமெரிக்கத் தடைகளால் உலகப் பொருளாதாரத்துக்குப் பாதிப்பு
2022-04-24 15:50:07

உக்ரைன்-ரஷிய மோதல் நிகழ்ந்த பின், ரஷியாவின் மீது அமெரிக்கா, பன்முகங்களிலும் கண்மூடித்தனமான தடை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே வேளை, தன்னைப் போல் ரஷியா மீது தடை விதிக்க வேண்டுமென அமெரிக்கா மற்ற நாடுகளிடம் நிர்ப்பந்தம் ஏற்படுத்தி வருகிறது. இத்தடைகள், பதற்றமான நிலைமையைத் தணிவு செய்யவில்லை. மட்டுமல்லாமல், உலகளவில் தொழில் மற்றும் விநியோகச் சங்கிலியைச் சீர்குலைத்து, வர்த்தகம், நிதி, எரியாற்றல், தானியம் முதலிய துறைகளில் புதிய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளன.