சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சுவார்த்தை
2022-04-24 15:52:21

ஏப்ரல் 18 முதல் 22ஆம் நாள் வரை, இலங்கைக்கு ஆதரவு வழங்கும் திட்டம் குறித்து, இலங்கை பிரதிநிதி குழுவினர்களுடன், சர்வதேச நாணய நிதியம், பயனுள்ள பேச்சுவார்த்தையை நடத்தினர் என்று இலங்கைக்கான இந்நிதியத்தின் பொறுப்பாளர் னொசாக்கி 23ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார மற்றும் நிதி வளர்ச்சி, நம்பகமான நிலையான திட்டங்களின் செயலாக்கம், தற்போதைய நெருக்கடி ஏழை மற்றும் நலிந்தோருக்கு ஏற்படுத்திய தாக்கத்தைக் குறைக்கும் வகையில், சமூகக் காப்புறுதி முதலியவை இப்பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டன.

எதிர்காலத்தில், பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க, இலங்கை அரசின் முயற்சிக்கு ஆதரவளிக்கும் சர்வதேச நாணய நிதியம், பொருளாதாரத் துறையில் நெருங்கிய ஒத்துழைப்பை மேற்கொள்ளவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.