உலக முதலீட்டு வங்கிகளின் முக்கிய முதலீட்டு இடமாக திகழும் ஷாங்காய்!
2022-04-25 16:20:18

உலக முதலீட்டு வங்கிகள் சீனாவின் ஷாங்காய் மாநகரில் முதலீட்டை விரிவாக்கும் திட்டத்தைச் செய்லபடுத்தி வருகின்றன. அவற்றின் திட்டம் தற்போதைய கோவிட்-19 கட்டுப்பாட்டு நடவடிக்கையால் மாறாது என்று பிரிட்டனின் “பைனான்சியல் டைம்ஸ்”  நாளிதழ் அண்மையில் தகவல் அறிவித்தது.

கடந்த சில வாரங்களில் கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் ஜேபி மோர்கன் சேஸ் ஆகிய நிறுவனங்கள், பகுதியான பணியாளர்களை சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்திலிருந்து ஷாங்காய்க்கு அனுப்பின. மேலும், வரும் சில ஆண்டுகளில் சிட்டிகுரூப், சுவிட்சர்லாந்தின் கிரெடிட் சூயிஸ் வங்கி முதலியவை ஷாங்காயை முக்கிய முதலீட்டு இடமாக கருதியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.