இலங்கையில் மருத்துவப் பொருள்கள் பற்றாக்குறை
2022-04-25 11:39:49

இலங்கையில் மருத்துவப் பொருள்கள் பற்றாக்குறையாக இருப்பதால் அடுத்து வரும் 90 நாள்கள் மிகவும் கடினமான காலமாக இருக்கும் என்று அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் சன்னா ஜெயசுமனா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையைச் சமாளிக்கும் விதம் மருத்துவ சங்கங்கள் மற்றும் மருத்துவத் துறையினர்களிடம் சுகாதார அமைச்சகம் உதவி கேட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.