மீண்டும் அதிபராகிறார் மேக்ரான்
2022-04-25 10:29:21

பிரான்சில் ஏப்ரல் 24ஆம் நாள் நடைபெற்ற அரசுத் தலைவருக்கான 2ஆவது கட்டத் தேர்தலில், தற்போதைய அரசுத் தலைவர் மேக்ரான், தீவிர வலது சாரி கட்சி வேட்பாளர் லெப்பென் அம்மையாரை விட முன்னணி வகித்து, மீண்டும் அரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

வாக்கு பதிவு முடிவின்படி, மேக்ரான் 58.6 சதவீத வாக்குகளும், லெப்பென் 41.4 சதவீத வாக்குகளும் பெற்றனர். அன்று இரவில் மேக்ரான் நிகழ்த்திய உரையில், வாக்காளர்களின் ஆதரவு மற்றும் நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்தார். லெப்பென் தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். பிறகு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாகத் தெரிவித்தார்.