மக்ரோனுக்கு ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து
2022-04-25 17:11:31

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 25ஆம் நாள் பிரான்ஸ் அரசுத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட இம்மானுவேல் மக்ரோனுக்கு செய்தி அனுப்பி, வாழ்த்து தெரிவித்தார்.

கடந்த 5 ஆண்டுகளில், நமது தலைமையில், சீன-பிரான்ஸ் பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவு உயர் தரமாக வளர்ந்து வருகின்றது. பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்புகளை இரு நாடுகள் ஆழமாக்கி வருகின்றது. மக்ரோனுடன் இணைந்து, இரு நாட்டுறவின் வளர்ச்சியை முன்னேற்றி, இரு நாடுகளுக்கும் பொது மக்களுக்கும் பயனடையச் செய்ய வேண்டும் என்று விரும்புவதாக ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.