உக்ரைனில் அமெரிக்க உயர் அதிகாரிகளுடன் ஜெலன்ஸ்கி சந்திப்பு
2022-04-25 16:47:50

உக்ரைனில் பயணம் மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் ஆகியோரை உக்ரைன் அரசுத் தலைவர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி 25ஆம் நாள் கீவில் சந்தித்துரையாடினார்.

ராணுவ உதவி, ரஷியா மீது தடை, உக்ரைனுக்கான நிதி ஆதரவு மற்றும் பாதுகாப்பு உத்தரவாதம் ஆகியவற்றைக் குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர்.