உலகளவில் குறைந்தது 169குழந்தைகளுக்கு கல்லீரல் அழற்சி பாதிப்பு
2022-04-26 19:05:10

தற்போது உலகளவில் குறைந்தது 169 குழந்தைகள் கல்லீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். பிரிட்டனில் மட்டுமே 114 குழந்தைகளுக்கு அதன் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, ஸ்பெயின், இஸ்ரேல், டென்மார்க், பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளிலும் குழந்தைகளுக்கு கல்லீரல் அழற்சியால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எஃப்41 எனும் அடினோவைரஸ் குழந்தைகளுக்குக் கல்லீரல் அழற்சியை ஏற்படுத்த சாத்தியம் அதிகம் என்று பிரிட்டனின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு ஏப்ரல் 25ஆம் நாள் தெரிவித்துள்ளது.