இலங்கையில் பங்கு வர்த்தகம் நிறுத்தம்
2022-04-26 10:35:35

இலங்கையில் பங்குகளின் குறியீடு 9.6 விழுக்காடு சரிவுக்குப் பிறகு பங்குச் சந்தை வர்த்தகம் திங்கள்கிழமை மீண்டும் நிறுத்தப்பட்டது. திங்கள் அன்று பங்கு வர்த்தகம் தொடங்கியபோது, பங்குகளின் விலை கடுமையாகச் சரிந்ததால், 11 மணி வரை வர்த்தகம் நிறுத்தப்பட்டது. தொடர்ச்சியாக விலை சரிந்த வண்ணம் இருந்ததால் நாள் முழுக்க பங்கு வர்த்தகம் நிறுத்தப்பட்டது.

முன்னதாக, ஒரு வார இலங்கை புத்தாண்டு விடுமுறை மற்றும் மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வு நடவடிக்கையால் 5 நாள்கள் பங்கு வர்த்தகம் நிறுத்தத்துக்குப் பிறகு திங்கள்கிழமைதான் பங்குச் சந்தை திறக்கப்பட்டது சுட்டிக்காட்டத்தக்கது.