உலகத்துக்கு நெடுநோக்கு தற்சார்ப்பு வாய்ந்த ஐரோப்பா தேவை
2022-04-26 10:26:05

பிரான்ஸ் அரசுத் தலைவராக மக்ரோன் 24ஆம் நாள் மீண்டும் பதவி ஏற்றார். ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு முக்கிய நாடாக இருக்கும் பிரான்ஸ் ஐரோப்பிய ஒருமைப்பாட்டை முன்னேற்றுவதற்கும் நெடுநோக்கு தற்சார்ப்பைக் கடைபிடிப்பதற்கும் முக்கிய நாடாக எப்போதும் விளங்கி வருகின்றது.

அமெரிக்காவின் காரணமாக, ரஷிய-உக்ரேனிய மோதலுக்கு ஐரோப்பா பலியானது.

நடைமுறையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் நலன்கள் முரண்படும் போது, அமெரிக்கா தனது கூட்டணி நாடுகளைக் கைவிடுவது உறுதி என்பதை அமெரிக்காவின் செயல்களின் மூலம், ஐரோப்பா அறிந்து கொண்டுள்ளது.

ஐரோப்பாவின் தலைவிதி ஐரோப்பியர்களின் கைகளிலேயே இருக்க வேண்டும். "ஐரோப்பிய நெடுநோக்கு தற்சார்ப்பு" பற்றிய மக்ரோனின் அறிக்கை கூடிய விரைவில் நடைமுறைக்கு வர வேண்டும்.