6ஆவது சீன மீன்வள அறிவியல் தொழில்நுட்ப மாநாடு
2022-04-27 11:26:07

2022ஆம் ஆண்டு 6ஆவது சீன மீன்வள அறிவியல் தொழில்நுட்ப மாநாடு அண்மையில் செங்து மாநகரில் நடைபெற்றது. தொழில்நுட்பத்தின் உதவி, புதுமையாக்கத்தின் உந்து சக்தி மற்றும் பசுமைசார் வளர்ச்சி என்பது, இந்த மாநாட்டின் கருப்பொருள்.  இதில், சீன மீனவளத் துறையின் மதிப்பு மிக்க 100 பிராண்ட்களின் தரவரிசைப் பட்டியல் முதன்முறையாக வெளியிடப்பட்டது. மூலப்பொருட்கள், உபகரணங்கள், உணவுப் பதனீடு முதலிய தொழில் சங்கிலியைச் சேர்ந்த  பிராண்ட்கள்  இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

2022ஆம் ஆண்டு சீன மீன்வளத்துறையில் 10 தொழில்நுட்பப் புதுமையாக்க விருது, 10 சிறந்த சாதனைகள் விருது, 10 சிறந்த பங்களிப்பு விருது ஆகியவை வழங்கப்பட்டன. மேலும், மீன்வளத்துறை சார்ந்த தொழில்நுட்பங்களின் வளர்ச்சிச் சாதனைகள், தொழில்நுட்பப் புதுமையாக்கம், பசுமைசார் வளர்ச்சிக்கான அனுபவங்கள் முதலியவை பகிர்ந்து கொள்ளப்பட்டன.