சிறுவர்களுக்கு கொவேக்சின் தடுப்பூசி – இந்தியா ஒப்புதல்
2022-04-27 10:01:13

இந்தியாவில் 6 முதல் 12 வயது குழந்தைகளுக்கான கொவேக்சின் தடுப்பூசிக்கும் 5 முதல் 12 வயது குழந்தைகளுக்கான கார்பிவேக் தடுப்பூசிக்கும் அவசரகால பயன்பாட்டு ஒப்புதல் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு செவ்வாய்க்கிழமை அளித்துள்ளது.

இத்தடுப்பசிகளின் ஒப்புதலைத் தொடர்ந்து, நோய் பரவல் தடுப்புக்கான இந்தியாவின் போராட்டம் வலுப்பெற்றுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மான்சுக் மண்டவியா தெரிவித்தார்.

கொவேக்சின், பாரத் பயோ டெக் நிறுவனத்தாலும், கார்பிவேக்ஸ், ஹைதராபதைச் சேர்ந்த பயலாஜிகல்-இ நிறுவனத்தாலும் தயாரிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் குழந்தைகளுக்கு நோய் தொற்று பரவி வரும் நிலையில் குழந்தைகளுக்கான இரு தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.