மனித உரிமைகள் காப்பாளரின் பதிலுக்காக காத்திருக்கும் உலகம்
2022-04-27 20:28:30

அமெரிக்க அரசு, அனைத்து உரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, சர்வதேச மனித உரிமைக் கடமைகளைப் பின்பற்ற வேண்டும். ஒருசார்பாக நடவடிக்கையை மாற்றி ஆப்கானிஸ்தானிலுள்ள மனித நேய நெருக்கடியைச் சமாளிப்பதற்கான பன்னாட்டு முயற்சியுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம். அண்மைக்காலமாக, ஐ.நா. மனித உரிமைகளுக்கான சுதந்திரமான நிபுணர்கள் 14 பேர் வெளியிட்ட கூட்டறிக்கையில் ஆப்கானிஸ்தான் மத்திய வங்கியின் நூற்றுக்கணக்கான கோடி அமெரிக்க டாலர் சொத்துகள் மீதான முடக்கத்தை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நூற்றுக்கணக்கான கோடி அமெரிக்க டாலர் மதிப்பு, வாஷிங்டனுக்கு குறைவு ஆகும். ஆனால்,  இந்த நிதித் தொகை ஆப்கானிஸ்தானுக்கு பெரியதாகவும் முக்கியத்துவமாகவும் திகழ்கிறது. சர்வதேச நிறுவனங்களின் கணிப்பில், தற்போது ஆப்கானிஸ்தானில், 2.3 கோடி மக்களுக்கு உணவு உதவி தேவைப்படுகிறது. கிட்டத்தட்ட 95 சதவீத மக்களுக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை.

இந்த நிலைமையை ஏற்படுத்தியதன் காரணமானவர்  யார்?  அமெரிக்கா தான் என்பதில் ஐயமில்லை. 2001ஆம் ஆண்டு பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில், அமெரிக்கா அந்நாட்டில் போர் தொடுத்ததால், அப்பாவி மக்களிடையே உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை, 1லட்சத்துக்கும் மேலாகும். மேலும், சுமார் 1.1கோடி மக்கள் அகதிகளாக மாறி உள்ளனர். பழைய பிரச்சினையைத் தீர்க்காமல், புதிய சிக்கலை ஏற்படுத்தி வரும் அமெரிக்கா,  உக்ரைன் நெருக்கடியைத் தூண்டுவதில் மிகப் பெரிய தரப்பாக, எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல நடந்து வருகிறது.

ஜனநாயகம், மனித உரிமைகள் குறித்து வாயில் பேசும்  அமெரிக்க அரசியல்வாதிகள், ஐ.நா. மனித உரிமைகள் நிபுணர்களின் கோரிக்கையைக் கேள்விப்பட்டதில்லை போன்று பாசாங்கு செய்துள்ளனர். மனித உரிமைகள் காப்பாளராக நடித்து வரும் அவர்கள், உலகிற்கு பதில் அளிக்க வேண்டியிருக்கின்றது.