இலங்கைக்கு 60 கோடி டாலர் அவசர உதவி அளிக்கும் உலக வங்கி
2022-04-27 15:28:22

தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க, இலங்கைக்கு 60 கோடி அமெரிக்க டாலர் நிதி உதவி அளிக்க உலக வங்கி ஒப்புக் கொண்டுள்ளதாக, இலங்கை அரசுத்தலைவர் மாளிகைச் செய்தி அலுலவகம் தெரிவித்துள்ளது.

செய்தி அலுலவகம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், உலக வங்கி வெகுவிரைவில் முதற்கட்டமாக  40கோடி டாலர் நிதியுதவி வழங்கவுள்ளது. மருந்துகள் மற்றும் ஆரோக்கியம், சமூகக் காப்புறுதி, வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு, இயற்கை எரிவாயு ஆகிய துறைகளில் இந்த நிதி செலவிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில், தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் கடந்து செல்லும் விதமாக, இலங்கைக்கு தொடர்ந்து உதவி அளிக்கப்படும் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.