பல்வேறு தரப்புகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்
2022-04-27 15:25:09

தற்போது, ரஷிய – உக்ரைன் நிலைமை, 3ஆம் உலகப் போர் போன்ற உண்மையான அச்சுறுத்தலை எதிர்கொண்டு இருக்கிறது என்று ரஷிய வெளியுறவு அமைச்சர்  செர்ஜி லாவ்ரோவ் அண்மையில் கூறியுள்ளார்.

இந்தக் கூற்று குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொர்பாளர் வாங் வென்பின் 26ஆம் நாள் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்

3ஆம் உலகப் போர் மூள்வதை யாரும் விரும்பவில்லை. பல்வேறு தரப்புகள், கட்டுப்பாட்டுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். நிலைமை தீவிரமாகாமல் தடுத்து, கூடிய விரைவில் அமைதியை உருவாக்குவதன் மூலமாக, ஐரோப்பா மற்றும் உலகம் அதிக விலை கொடுக்காமல் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.