உலகிற்கு முக்கியத்துவம் வாய்ந்த சீனா
2022-04-27 16:50:21

ரஷிய-உக்ரைன் மோதல், கோவிட்-19 நோய் தொற்று பரவல் உள்ளிட்டவை பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமல்ல, உலகளாவிய தொழில் சங்கிலி மற்றும் எரியாற்றலின் பசுமை மாற்றத்துக்கும் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன என்று உலகப் பொருளாதாரம் பற்றி சர்வதேச நாணய நிதியம் அண்மையில் வெளியிட்ட புதிய மதிப்பீட்டில் காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய-பசிபிக் துறையின் துணை இயக்குநர் ஸ்ரீனிவாசன் கூறுகையில், ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் சீனா மிகப் பெரிய பொருளாதாரச் சமூகமாகும். சீனாவில் கோவிட்-19 நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் போது, வினியோகச் சங்கிலியின் பயனுள்ள மீட்சி காணப்படும் என்பதில் ஐயமில்லை. இதர நாடுகள் சொந்தப் பங்கினை ஆற்றும் என்பதும் நிச்சயம் என்று குறிப்பிட்டார். பசுமை மாற்றத்தில், ரஷிய-உக்ரைன் மோதலால் உலக எரியாற்றல் விலை ஏற்றத்தாழ்வைச் சந்தித்துள்ள போதிலும், சீனாவின் பசுமை மாற்றத்தின் பயன் தெளிவாக உள்ளது. நடுத்தர காலத்தைப் பார்த்தால், எரியாற்றலின் பசுமை மாற்றம் மற்றும் அதன் வினியோகத்தின் பல்வகையைத் தொடர்ந்து உறுதியுடன் முன்னேற்ற வேண்டும். இதில் சீனா முக்கியப் பங்காற்றும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.