உலகிற்கு சீனாவின் அன்பளிப்புகள்
2022-04-27 11:45:45

50 ஆண்டுகளுக்கு முன், டூஆவ்ஆவ் அம்மையார் உள்ளிட்ட சீன அறிவியலாளர்கள் ஆர்ட்டெமிசினினைக் கண்டுபிடித்து அதனை வெற்றிகரமாகப் பிரித்தெடுத்தனர். இதன் மூலம், சீனா மலேரியா இல்லாத நாடாக மாறியது. சிகிச்சையில் இந்த மருந்து விரைவாக பயன் தரக் கூடியது. பக்க விளைவுகள் குறைவு. விலையும் மலிவு.   சீனா பெருந்தன்மையுடன் இதனை உலகிற்கு அறிமுகப்படுத்தி, சர்வதேச சமூகத்தின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி, ஆண்டுக்கு மலேரியாவால் பாதிக்கப்பட்டு வந்த 10 கோடிக்கும் மேலான மக்கள் ஆர்ட்டெமிசினினைப் பயன்படுத்தி குணமடைந்தனர்.

நோய்கள் மனித வளர்ச்சிக்குத் தடை செய்யும் காரணியாக இருக்கக் கூடாது என்று சீனா எப்போதும் கருதுகின்றது. ஆர்ட்டெமிசினின் முதல் சீன தடுப்பூசிகள் வரை, சீனா உலகத்துடன் சேர்ந்து இன்னல்களைச் சமாளித்து நோய்களுக்கு எதிராகப் போராடி வருகின்றது.

மலேரியாவோ கோவிட்-19வோ எதை எதிர்கொள்ளும் போது, சீன மக்கள் என்றுமே உலக மக்களுடன் ஒன்றிணைக்கின்றனர்.