தென் பசிபிக் கடலில் அலைந்துச் செல்லும் பேய் யார்
2022-04-28 21:36:56

“ஒரு பேய், தென் பசிபிக் பெருங்கடலில் அலைந்து சென்று கொண்டிருக்கிறது. நான் சொல்வது, சீனா அல்ல. மாறாக, நாங்கள் தான். ”என்று பிரிட்டனின் நாளிதழ் தி கார்டியன் வெளியிட்டுள்ள கட்டுரையில் இவ்வாறு தெரிவித்ததோடு,தென் பசிபிக் தீவு நாடான சாலமன் தீவுகளுக்கும் சீனாவுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கை கையெழுத்தானது குறித்து அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா,அளவுக்கு மீறி எதிரொலி எழுப்பியுள்ளன என்றும் விமர்சித்துள்ளது.

கடந்த சில நாட்களில், சீனா- சாலமன்கள் இடையேயான இயல்பான ஒத்துழைப்பைத் தடுக்கும் விதமாக, அமெரிக்கா, ஆஸ்திரேலியா இயன்றளவில் முயன்று வருகின்றன. சமத்துவமான முறையில், மக்களின் உயிர் மற்றும் உடமைப் பாதுகாப்பு, மனித நேய உதவி, இயற்கைப் பேரிடர் சமாளிப்பு உள்ளிட்ட துறைகளில் சீனாவுடான ஒத்துழைப்புகளை மேற்கொள்வது அந்நாட்டின் நலன்கள் மற்றும் வளர்ச்சித் தேவைக்குப் பொருந்தியதாக உள்ளது. ஆனால், இந்த ஒத்துழைப்பு, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் எதிரொலியை எழுப்புவது ஏன்?

இதற்கான மூலக்காரணம், அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும், சாலமான் தீவுகளை இறையான்மை நாடாக கருத்தில் கொள்ளவில்லை. அவர்களின் பார்வையில், பசிபிக் தீவு நாடுகள், யாருடன் ஒத்துழைப்பது அல்லது யாருடன் ஒத்துழைக்க கூடாது என்பதில் அவர்களால் தான் முடிவெடுக்கப்பட வேண்டும். இது முற்றிலும், காலனித்துவம் மற்றும் மேலாதிக்கம் போன்ற சிந்தனைகளாகும். கடந்த சில ஆண்டுகளில், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகியவை முத்தரப்பு பாதுககாப்புக் கூட்டுறவை உருவாக்கி, அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் உள்பட உணர்ச்சிமிக்க ராணுவ ஒத்துழைப்புகளை மேற்கொண்டுள்ளன. இச்செயலே, தென் பசிபிக் கடலில் அணுஆயுதமில்லா நிலையை அடைவதற்கான முயற்சியைச் சீர்குலைப்பதோடு, தென் பசிபிக் தீவு நாடுகளின் நலன்களையும் கடுமையாகப் பாதிக்கின்றது.