சர்வதேச வரவு செலவு சரிசம நிலை பற்றிய புள்ளிவிவர வெளியீடு:சீனா
2022-04-28 10:22:09

2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், சர்வதேச வரவு செலவின் சரிசம நிலை பற்றிய முதற்கட்ட புள்ளிவிவரங்களைச் சீனத் தேசிய அந்நிய செலாவணிப் பணியகம் 27ஆம் நாள் வெளியிட்டது. அவற்றிலுள்ள நடப்புக் கணக்கு மிகைத்தொகை, சரக்குகளின் வணிக மிகைத் தொகை, சீனாவில் நேரடி முதலீட்டின் நிகர வரவு முதலிய புள்ளிவிவரங்கள், 1998ஆம் ஆண்டில் இத்தகைய புள்ளிவிவரங்கள் வெளியிடத் தொடங்கியதிலிருந்து முதல் காலாண்டில் மிக உயர்ந்த மதிப்புகளை எட்டியுள்ளன.

உலகப் பொருளாதார மீட்சிப் போக்கில், சீனப் பொருளாதாரம் வெளிநாட்டு வர்த்தகத்தின் வளர்ச்சிக்கு உறுதியான ஆதரவை வழங்குகிறது. சீனப் பொருளாதாரம் நீண்டகாலமாக மேம்பட்டு வருகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சீனாவில் முதலீடு செய்ய விரும்பும் வகையில், சீனப் பொருளாதாரம் வலுவாக உள்ளது என்று சீனத் தேசிய அந்நிய செலாவணிப் பணியகத்தின் துணைத் தலைவரும் செய்தித் தொடர்பாளருமான வாங் சுன்யிங் கூறினார்.