கிராம வளர்ச்சிக்குத் துணைப் புரிந்த நெடுஞ்சாலை கட்டுமானம்
2022-04-28 10:26:25

2018ஆம் ஆண்டு, சீனாவில் உயர் வேக நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 1 லட்சத்து 40 ஆயிரம் கிலோமீட்டரை எட்டி, உலகத்தில் முதலாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, போக்குவரத்து வளர்ச்சியின் மூலம் வறுமை ஒழிப்புப் பணி சீனாவில் பெரிதும் முன்னேற்றப்பட்டு வருகிறது. தற்போது, சீனக் கிராமங்களில் நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 44 லட்சத்து 66 ஆயிரம் கிலோமீட்டரை எட்டியுள்ளது. 50 கோடிக்கும் மேலான கிராமவாசிகள் இதிலிருந்து நலனைப் பெற்றுள்ளனர்.