ஜொல்மோ லுங்மா சிகரத்துக்கான சீனாவின் அறிவியல் ஆய்வு துவக்கம்
2022-04-28 15:42:49

சிங் காய்-திபெத் பீடபூமி, சீனாவின் உயிரினப் பாதுகாப்புக்கான முக்கிய பகுதியாகும். ஜொல்மோ லுங்மா சிகரத்துக்கான சீனாவின் புதிய அறிவியல் ஆய்வு நடவடிக்கை ஏப்ரல் 28ஆம் நாள் பன்முகங்களிலும் துவங்கியது. 16 ஆய்வுக் குழுக்களைச் சேர்ந்த 270க்கும் மேலான பணியாளர்கள் இந்நடவடிக்கையில் பங்கெடுக்கின்றனர்.

ஜொல்மோ லுங்மா சிகரப் பகுதியிலுள்ள சுற்றுச்சூழல் மாற்றம், இந்த ஆய்வின் முக்கிய அம்சமாகும். காற்று, நீர்,  நிலம், உயிரினச் சூழல், ஆகியவற்றை பணியாளர்கள் ஆய்வு செய்வார்கள்.

மேலும், கடல் மட்டத்திலிருந்து 5200 மீட்டர் முதல் 8800 மீட்டர் வரை உயரமுள்ள இடங்களில், 8 வானிலை ஆய்வு நிலையங்களின் உருவாக்கம், நடப்பு ஆய்வின் முக்கிய கடமையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.