சீன-சாலமன் உடன்படிக்கையில் தலையிட எந்த நாட்டுக்கும் உரிமை இல்லை: சீனா
2022-04-28 16:45:47

காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான சீனா- பசிபிக் தீவு நாடுகளின் ஒத்துழைப்பு மையத்தின் துவக்க விழாவில் சீனத் துணை வெளியுறவு அமைச்சர் சியேஃபெங் 28ஆம் நாள் காணொளி வழியாக பங்கேற்று உரைநிகழ்த்தினார்.

சீன-சாலமன் அரசுகளிடையே பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக் கட்டுக்கோப்பு உடன்படிக்கை சுய விருப்பத்தின்படி உருவாக்கப்பட்டது. இது இறையாண்மை கொண்ட இரு நாடுகளின் புனிதமான உரிமை மற்றும் இயல்பான ஒத்துழைப்பு ஆகும். சர்வதேச சட்டத்துக்கும் சர்வதேச நடைமுறைக்கும் பொருந்தியது. சாலமன் மற்றும் தென் பசிபிக் பிரதேசத்தின் பொது நலன்களுக்கும் இந்த உடன்படிக்கை பொருந்தியதாக உள்ளது என்று சியேஃபெங் கூறினார்.

யார் பிரதேசத்தின் அமைதியைப் பேணிகாத்து கூட்டு நலன் மற்றும் ஒத்துழைப்பை முன்னேற்றி வருவது? யார் மேலாதிக்கம் நாடி பிரிவிணைவாதம் மற்றும் பகைமையைக் கிளப்பி வருவது? என்பது பற்றி பசிபிக் தீவு நாட்டு மக்கள் மற்றும் சர்வதேச சமூகம் தெளிவாக தெரிந்து கொண்டுள்ளனர். வரலாற்றுப் போக்கிற்கு எதிராக செயல்படும் நாடுகளின் சதி பலிக்காதது உறுதி என்பது அவர் தெரிவித்தார்.