திபெத்தில் அற்புதமான மரச் செதுக்கல் நுட்பம்
2022-04-28 10:32:19

சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நீமூ மாவட்டத்தைச் சேர்ந்த பூசொங் கிராமம், செதுக்கல் கிராமம் என்று அழைக்கப்படுகிறது. உள்ளூர் மக்கள் தலைமுறை தலைமுறையாக மரச் செதுக்கல் தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொண்டு திறமையை வெளிக்கொணர்த்து வருகின்றனர். தற்போது, நீமூ மரச் சிற்பங்கள் மிகவும் வரவேற்கப்பட்டுகின்ற கலைப் பொருட்களாகும். 2009ஆம் ஆண்டு, இந்தச் செதுக்கல் நுட்பம், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. உள்ளூர் மக்கள் இந்தத் தொழிலின் மூலம் வருமானத்தை அதிகரித்து, இனிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.