சீன-அமெரிக்க உறவுக்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்காற்ற வேண்டும்:சீனா
2022-04-28 17:09:38

அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனெட் அவை மற்றும் பிரதிநிதிகள் அவையின் பிரதிநிதிக் குழு சீனாவில் முதன்முறை பயணம் மேற்கொண்டதன் 50ஆம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், சீனா மற்றும் அமெரிக்காவின் தொடர்புடைய வாரியங்கள் அண்மையில் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளன. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 28ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரலாற்றிலிருந்து ஞானத்தைப் பெற்று, சீன-அமெரிக்க உறவை சீராக வளரும் பாதைக்குத் திரும்பச் செய்வதற்கு ஆக்கப்பூர்வ பங்கினை ஆற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.