2022 நியூயார்க் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட விழாவில் தங்க விருது வென்றது சி.ஜி.டி.என்.
2022-04-28 17:22:37

2022 நியூயார்க் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட விழா விருதுகளின் தேர்வு முடிவு ஏப்ரல் 26ஆம் நாள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விழாவில், சி.ஜி.டி.என் செய்தி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட "A Musical Toast to 2022" எனும் புத்தாண்டு சிறப்பு இசை நிகழ்ச்சி, கலைநிகழ்ச்சி அரங்கேற்றப் பிரிவில் தங்க விருது வென்றது குறிப்பிடத்தக்கது. மேலும், சி.ஜி.டி.என், 2 வெள்ளி மற்றும் 3 வெண்கல விருதுகளையும் வென்றது.

2022 புத்தாண்டை முன்னிட்டு, சி.ஜி.டி.என் நிறுவனம், உலகின் 8 நாடுகளைச் சேர்ந்த இளைய இசைக்கலைஞர்களை அழைத்து, A Musical Toast to 2022" இசை நிகழ்ச்சியைக் கூட்டாக நடத்தியது. இசை மூலமாக, உலகிற்கு சீனப் பண்பாட்டை அறிமுகம் செய்து, உலக பார்வையாளர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக, இந்த இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.