கோவிட்-19 பெருந்தொற்று முடிவுக்கு வரவில்லை - ஐரோப்பிய ஒன்றியம்
2022-04-28 16:11:00

தற்போது வரை, ஐரோப்பிய ஒன்றியத்தில் 60 முதல் 80 விழுக்காடு வரையான மக்கள் தொகைக்கு கோவிட்-19 நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் புதிய தொற்றின் நிலைமைகள் மற்றும் உருமாறிய வைரஸ் மீது மிகுந்த விழிப்புணர்வுடனும், தயார் நிலையிலும் இருக்க வேண்டும். ஏனென்றால், கோவிட்-19 பெருந்தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று ஐரோப்பிய ஆணையத்தின் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு விவகாரத்துக்கான ஆணையர் ஸ்டேல்லா கிரியாகிடிஸ் ஏப்ரல் 27ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.