கிராமவாசிகளுக்கு இனிமையான வாழ்க்கையைப் பதிவு செய்யும் நீமூ தாள்
2022-04-28 10:28:48

சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நீமூ மாவட்டத்திலுள்ள திபெத் தாள் மிகவும் புகழ்பெற்றது. இத்தகைய தாள் ஆயிரத்துக்கும் மேலான ஆண்டுகளாகக் கெட்டுப்போகாமல் சேமிக்கப்பட்ட முடியும். 2006ஆம் ஆண்டு, நீமூ தாளுக்கான தயாரிப்பு நுட்பம் சீனாவின் முதலாவது தொகுதியான தேசிய நிலை பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக, நீமூ மாவட்ட அரசு, இந்தத் தாள் தயாரிப்பு நுட்பத்துக்கான பாதுகாப்பைப் பெரிதும் வலுப்படுத்தி, உள்ளூர் விவசாயிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது.