பல்கேரியா மற்றும் போலந்துக்கு ரஷிய இயற்கை எரிவாயு விநியோகம் துண்டிப்பு
2022-04-28 10:28:39

பல்கேரியா மற்றும் போலந்துக்கான எரிவாயு விநியோகம் ஏப்ரல் 27ஆம் நாள் முதல் தற்காலிகமாகத் துண்டிக்கப்படும் என்று ரஷிய இயற்கை எரிவாயு நிறுவனம் அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

ரூபிள் மூலம் செலுத்த வேண்டிய ஏப்ரல் திங்கள் கட்டணம் 26ஆம் நாள் வரையிலும் கிடைக்கவில்லை என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு முன் ரஷிய அரசுத் தலைவர் புதின், மார்ச் 31ஆம் நாள், நட்பற்ற நாடுகள் மற்றும் பிரதேசங்களுடன் இயற்கை எரிவாயு வர்த்தகம் மேற்கொள்ளும் போது ரூபிள் மூலம் கணக்கு தீர்க்க வேண்டும் என்ற கட்டளையிட்டார். இது பற்றி ஒப்பந்தக்காரர்களிடம் ரஷியா தெரிவித்துள்ளது என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

மாற்று எரிவாயு மற்றும் எரியாற்றல் பாதுகாப்புக்கு உத்தரவாதம் செய்யும் வகையில், நிலைமையைச் சமாளிக்கும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் ஆய்வு செய்து வருகிறது.