அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு கடும் வீழ்ச்சி - டாய்ச் வங்கி
2022-04-28 16:02:25

அமெரிக்கப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று ஜெர்மனியின் டாய்ச் வங்கி 26ஆம் நாள் கணித்துள்ளது. அன்று, இவ்வங்கியின்

பொருளாதாரப் பகுப்பாய்வாளர் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய ஆய்வு அறிக்கையில் இந்த முன்மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க பணவீக்கம் உச்சத்தை அடைய சாத்தியம் உள்ள போதிலும், அமெரிக்க பெடரல் ரிசாவ் வங்கியின் ஆளுநர்கள் குழு வகுத்துள்ள இலக்கு, அதாவது 2 விழுக்காட்டுக்குத் திரும்ப இன்னும் நீண்ட நேரம் தேவைப்படும். இதற்காக, அமெரிக்க பெடரல் வங்கி தீவிரமாக வட்டி விகிதத்தை உயர்த்தினால், பொருளாதாரத்திற்கு கடும் தாக்கம் ஏற்படும் என்று டாய்ச் வங்கியின் புதிய கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்க தொழிலாளர் அமைச்சகம் 12ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிபரங்களின்படி, கடந்த மார்ச் திங்கள் அமெரிக்க நுகர்வோர் விலைவாசிக் குறியீடு, கடந்த ஆண்டின் அதே காலகட்டத்தில் இருந்ததை விட 8.5 விழுக்காடு உயர்ந்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு புதிய உச்சம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.