அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி 1.4 சதவீத வீழ்ச்சி
2022-04-29 16:12:20

ஆண்டு வளர்ச்சி விகிதக் கணிப்பின் படி, 2022ஆம் ஆண்டின் முதல் 3 திங்களில், அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்புக்கு 1.4 விழுக்காடு வீழ்ச்சி அடைந்துள்ளது என்று அமெரிக்க வணிகத் துறை அமைச்சகம் ஏப்ரல் 28ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரிவித்துள்ளது.

கோவிட்-19 நோய் தொற்று ஏற்பட்ட பிறகு கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமான பதிவானது இதுவாகும். அமெரிக்காவின் விநியோகச் சங்கிலிக் குழப்பம், புதிய உச்சத்திலான பணவீக்கம் மற்றும் தொழிலாளர்கள் தட்டுப்பாடு ஆகியவை இதற்கு முக்கிய காரணாகும் என கருதப்படுகிறது.